முன்னாள் அரசு வழக்கறிஞருடன் அவசர ஆலோசனையில் அழகிரி... தொடரும் பரபரப்பு!

By sathish kFirst Published Aug 23, 2018, 4:54 PM IST
Highlights

கலைஞர் உயிரோடு இருந்த போதே ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. ஆனால் அரசியல் சாணக்கியனாக இருந்த கலைஞர் குடும்பத்தில் நடந்து வந்த  இந்த பிரச்சனைகளையும் மிக லாவகமாக கையாண்டுவந்தார். 

தற்போது அவரின் இழப்பிற்கு பிறகு ஆரம்பித்திருக்கும் ஸ்டாலின் ,அழகிரிபிரச்சனையை தீர்த்துவைக்கும் அளவிற்கு யாரும் இல்லாத காரணத்தால் வேறு திசை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது இவர்கள் இடையேயான அரசியல் யுத்தம்.

இதில் திமுக உடையப்போகிறது, திமுக விசுவாசிகள் என்பக்கம் என கொளுத்தி போட்ட அழகிரி அடுத்தடுத்து எடுத்த தடாலடி நடவடிக்கைகளால் திமுகவில் விறுவிறுப்பு கூடி இருக்கிறது. 

அதிலும் செப்டம்பர் மாதம் அவர் நடத்த உள்ள இரங்கல் ஊர்வலம் தான் அரசியல் வட்டாரத்தில் இப்போது ஹாட் டாப்பிக். இந்த ஊர்வலத்தில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து தான் அழகிரிபக்கம் யார் யார் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்குவரும்.


இதனிடையே அழகிரி வேறு சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.இதனை தொடர்ந்து முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன் குமாரிடம் ஆலோசிப்பதற்காக அவரை சந்திக்கவிருக்கிறாராம் மு.க.அழகிரி.இந்த சந்திப்பு எதை குறித்து என்பது கூறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. 

ஆனால் சட்ட ரீதியாக ஏதோ ஒரு நடவடிக்கை எடுக்க அழகிரி தயாராகி வருகிறார் என்பது மட்டும் உறுதி. 
எனவே தான் அவரது மகன் தயநிதி அழகிரி இன்னும் சென்னையை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கிறார். மேலும் இதுவரை 5க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வேறு தொடர்பு கொண்டு பேசி இருக்கிறாராம். 


இவ்வாறு அழகிரியின் தரப்பில் ஒரு முயற்சி போய்க்கொண்டிருக்கும் போதே அந்த முயற்சிகளை தடுக்கும் வேலையை செய்து வருகின்றனராம் ஸ்டாலின் தரப்பினர். இதன் படி தயாநிதி யாரை எல்லாம் ஃபோனில் அழைத்து பேசுகிறாரோ அவர்களுக்கெல்லம் உடனடியாக உதயநிதியிடம் இருந்து அழைப்பு வருகிறதாம். 

அடுத்து நாம தான் எல்லாம் , நம்ம ஆட்சி தான் இனிமேனு தெரியும்ல. எந்த முடிவுனாலும் யோசிச்சு எடுங்க என தயாநிதி பேசும் ஒவ்வொரு நபரிடமும் தெரிவித்திருக்கிறார் உதயநிதி. 

அவர் பேசுனது இவருக்கு எப்படி தெரிஞ்சுது என ஆடிப்போயிருக்கின்றனர் சம்பந்தபட்ட நபர்கள். ஒரு வேளை கர்நாடகாவில் செய்த மாதிரி ஏதாவது புது அப்ளிகேஷன் உதயநிதி உபயோகிக்கிறாரோ என்னமோ?

click me!