திருமங்கலம் பார்முலாவிற்கு இனி இடமில்லை... அழகிரியை வெளுத்து வாங்கும் அமைச்சர்!

Published : Aug 23, 2018, 04:31 PM ISTUpdated : Sep 09, 2018, 07:38 PM IST
திருமங்கலம் பார்முலாவிற்கு இனி இடமில்லை... அழகிரியை வெளுத்து வாங்கும் அமைச்சர்!

சுருக்கம்

தி.மு.க.வில் தொலைத்த முகவரியை மு.க.அழகிரி தேடுகிறார் என அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார் மு.க.அழகிரி தி.மு.க.வில் முகவரி இல்லாமல் இருந்து வருகிறார்.

தி.மு.க.வில் தொலைத்த முகவரியை மு.க.அழகிரி தேடுகிறார் என அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார் மு.க.அழகிரி தி.மு.க.வில் முகவரி இல்லாமல் இருந்து வருகிறார். தி.மு.க.வில் அடைக்கப்பட்ட கதவுகளை திறக்கவே அழகிரி தொண்டர்களை சந்திக்கிறார் என்று கூறியுள்ளார். 

இதே அழகிரி தான் 2011-க்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது என்று கூறினார். ஆனால் இப்போது அவர் திமுகவிலேயே காணாமல் போய்விட்டார். அவர் உருவாக்கிய திருமங்கலம் ஃபார்முலாவிற்கு இனி இடமில்லை என்று கிண்டல் செய்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த நேரத்திற்கு ஏற்றார் போல் பேசி வருகிறார். அதனால் தான் கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் முதல்வரை விமர்சித்து பேசினார். எம்.ஜிஆர். மற்றும் கலைஞர் படங்களை ஒரே மேடையில் வைக்க வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!