கொரோனா குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது எந்த எல்லைக்கும் செல்வேன்.! கொந்தளித்த முதல்வர் உத்தவ்தாக்ரே.!!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2020, 11:26 PM IST
Highlights

"போலியான வீடியோக்களின் மூலம் மத ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவோரை தண்டிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன்'' என மகாரஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

T.Balamurukan

"போலியான வீடியோக்களின் மூலம் மத ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவோரை தண்டிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன்'' என மகாரஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. 

 சமூக ஊடகங்களில் மக்களிடம் வெறுப்பைத் தூண்டும் வகையில் பரவும் காணொளிகள் மற்றும் ஆடியோக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மும்பை போலீஸ் கமிஷ்னர், அவை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, மகாராஷ்டிராவில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இதுவரை 51 பேர் குணமடைந்துள்ளனர். என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

 கொரோனாவுக்காக பிரத்யேகமாக பல சோதனை மையங்களும் மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது நம்முடைய கைகளில்தான் உள்ளது. மாநிலத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசியல், விளையாட்டு, மதம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். கொரோனா பாதிப்பில் இந்த மாநிலம் முதலிடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!