கொரோனாவுக்கு எதிராக இந்திய மக்கள் ஒரே நேரத்தில் கொண்டாடிய தீபாவளி,திருக்கார்த்திகை

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2020, 10:48 PM IST
Highlights

கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வரும் நிலையில், ஒற்றுமையை காட்டும் வகையில், மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றியும்,வானவேடிக்கை வெடித்தும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று திருக்கார்த்திகை போலவும்,தீபாவளியை போலவும் மக்கள் நாடு முழுவதும் கொண்டாடி இருளில் இருந்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

T.Balamurukan

கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வரும் நிலையில், ஒற்றுமையை காட்டும் வகையில், மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றியும்,வானவேடிக்கை வெடித்தும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று திருக்கார்த்திகை போலவும்,தீபாவளியை போலவும் மக்கள் நாடு முழுவதும் கொண்டாடி இருளில் இருந்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்


 
இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 3000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மாதம் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி.
 மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் கைதட்டி ஒலி எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இன்று வீட்டில் விளக்கு ஏற்றியும்,டார்ச் லைட் அடித்தும் மக்கள் வானவேடிக்கை போட்டும் திருவிழா போல் கொண்டாடியிருக்கிறார்கள்.
 கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மாதம் 24ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, மூன்றாவது முறையாக நேற்று முன் தினம் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர், "ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து உங்கள் வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச் அல்லது அகல் விளக்கை 9 நிமிடங்கள் ஒளிர விடுங்கள்" என்றார். கொரோனா பாதிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.


இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் முதலவர் எடப்பாடி,துணைமுதல்வர் ஓபிஎஸ்,நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என தமிழகத்தின் பிரபலங்கள் அகல்விளக்கு ஏற்றியும், டார்ச் லைட் அடித்தும் இந்தியாவை ஒளிரவிட்டிருக்கிறார்கள்.


மதுரையில் இந்து ,முஸ்லீம்,கிறிஸ்தவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றினார்கள். வீதிகள் தோறும் திருக்கார்த்திகை போலும்,தீபாவளி போலும் வானவேடிக்கைகள் வெடித்தும் மக்கள் கொரோனாவுக்கு எதிராக தங்கள் வீட்டுகளில் பிராத்தனைகள் செய்தும் ,மணியோசை எழுப்பியும் இறைவனை வழிபட்டார்கள். மேற்கத்திய நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைக்கும் இந்தியாவிற்கு செவ்வாய் ஆதிக்கம் இருப்பதால் பாதிப்பு இருக்காது என்கிறது நம்முடைய ஜோதிடம்.அதேபோல் தற்போது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நம்முடைய நாடு ஆன்மீகநாடு. நிச்சயம் கொரோனாவில் இருந்து ஆன்மீகம் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் எடுக்கும் முயற்சி நல்ல பலனை தரும் என்கிறது ஆன்மீக தரப்பு. பொருத்திருந்து பார்ப்போம்....
 

click me!