மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!

Published : Apr 05, 2020, 05:17 PM IST
மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பொதுமக்கள் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பொதுமக்கள் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485ஆக  அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, அதன் ஒரு கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், கொரோனா நிலை எப்படி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நிலை என்ன என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!