பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை.. என் மீதான கொலை வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.. திமுக எம்.பி.ரமேஷ்.!

By vinoth kumarFirst Published Oct 10, 2021, 3:41 PM IST
Highlights

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் (55) என்பவர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கடலூர் எம்.பி. ஆலையின் உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாக எம்.பி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் (55) என்பவர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கடலூர் எம்.பி. ஆலையின் உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

இதனையடுத்து, கோவிந்தராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, கோவிந்தராஜுவின் உடலில் காயங்கள் இருந்ததால், அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல புகார் அளிக்கச் சென்றவர்களிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது, திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் தன்னை தாக்கிவிட்டதாக கோவிந்தராஜு கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு தொழிற்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கோவிந்தராஜ் செப்டம்பர் 20-ம் கொலை செய்யப்பட்டார். 

இதனையடுத்து, தந்தை இறப்புக்கு கடலூர் எம்.பி. ரமேஷ் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து கொலை வழக்காக பதிவுசெய்து, 5 பேரை ஏற்கெனவே கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் பெயரையும் இணைத்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை கைது செய்ய மக்களவையின் செயலரிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், இதையடுத்து அவரை விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை வட்டார தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. என் மீதான புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். 

click me!