திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? ஸ்டாலின் ஆட்சி எப்படி? விஜயபிரபாகரன் சொன்ன நச் பதில்..!

Published : Oct 10, 2021, 02:58 PM IST
திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? ஸ்டாலின் ஆட்சி எப்படி? விஜயபிரபாகரன் சொன்ன நச் பதில்..!

சுருக்கம்

மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே தான் உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம். 

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும் தேமுதிக அதே எழுச்சியோடு உள்ளதாகவும் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வெற்றி தோல்வி என்பது கட்சிக்குள் சகஜம். ஆகவே நிச்சயமாக தேமுதிக அதே எழுச்சியுடன் தூக்கி நிறுத்துவோம். கேப்டனுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம். 

மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே தான் உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம். திமுகவின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும். தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நலமாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாட்களாகும். எங்களால் முடிந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.சரியான நேரத்தில் விஜயகாந்த மக்களை சந்திப்பார் என விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!