குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? மூத்த அமைச்சர் கே.என்.நேரு சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 10, 2021, 1:48 PM IST
Highlights

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதற்கு ஆளும் திமுக தரப்பில் இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பிலும், அமைச்சர்கள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த வாக்குறுதி குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திமுக அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா? தற்போது நடைபெற்றதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது.  உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என தெரிந்ததால் தான் இப்போதே தேர்தல் முறையாக நடக்கவில்லை என அதிமுகவினர் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.

click me!