
ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு வழக்கை பற்றி விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார் முதலமைச்சர். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- எடப்பாடி பழனிசாமி எந்த நான்கு பேரை சொல்கிறார். என அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் கேட்ட அனைத்து அதிகாரங்கள் மற்றும் பதவிகளை கொடுத்தோம். ஆனால், எத்தனை தேர்தல்களில் வென்றார்? இந்த தேர்தல் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல் பத்தாண்டுகள் நல்லாட்சி தந்துள்ளதால் மீண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்தியா கூட்டணி ஆண்டிகள் கூடி கட்டிய மடம் போல உள்ளது.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!
ஒன்றரை கோடி தொண்டர்களும் கழகத்தின் இந்த அவல நிலையை பார்த்து வேதனை அடைந்துள்ளனர். இபிஎஸ் அணியிலுள்ள பலரும் அதே அளவு மன வேதனையில் தான் உள்ளனர். கழகம் இணையாமல் இருப்பதற்கு இபிஎஸ் தான் காரணம் என எங்களுடன் பேசுகின்றனர். இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய கழக சட்ட விதிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கிய உரிமைகள் மீது கை வைக்கலாமா?
ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு வழக்கை பற்றி விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார் முதலமைச்சர். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லை. அதனால் தான் எடப்பாடிக்கும் அவருக்கும் ஒரு வேலை கூட்டணி இருக்குமோ என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். எடப்பாடி திகார் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய ரகசியத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லுவேன்.
இதையும் படிங்க;- ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆட்சி! இன்னும் கொடநாடு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியல! ஆளுங்கட்சியை விளாசும் OPS!
இரட்டை இலை சின்னம் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு வந்தாலும் நாங்கள் தலை வணங்குவோம். எங்களது இலக்கு நியாயமானது. அதனால் ஒரு போதும் இந்த போராட்டத்தில் நாங்கள் சோர்வடையவில்லை இனியும் சோர்வடைய மாட்டோம். வரும் மக்களவைத் தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.