ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டின் நிலைமை இதுதான்! விஜயபாஸ்கர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

By vinoth kumar  |  First Published Jan 11, 2024, 7:46 AM IST

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் படிந்த அறுவை சிகிச்சை உபகரணங்களை அவரது மகன் கழுவுகின்ற வீடியோ வெளியானது. 


அரசு மருத்துவமனைகள் ஏழை - எளிய மக்களின் உயிர் நிவாரணி. அதன் மீதுள்ள நம்பிக்கை பறிபோகாமல் காக்க வேண்டியது அரசின் கடமை என  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தலைநகரின் மிக முக்கிய பகுதியாக விளங்கும் இராயப்பேட்டையில் அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டில், நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உடன் வந்தவர்களே தூக்கி சுமக்கின்ற காட்சியும், மறுபுறம், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீர் வாளியைக் கொண்டு முட்டு கொடுத்திருக்கும் கொடுமையும் அதிர்ச்சியளிக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!

சமீபத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் படிந்த அறுவை சிகிச்சை உபகரணங்களை அவரது மகன் கழுவுகின்ற வீடியோ வெளியானபோதே, எளிய மக்களின் உயிர் பாதுகாப்பில், அவர்களது சுகாதாரமான வாழ்வுக்கு வித்திட வேண்டிய அரசு மற்றும் சுகாதாரத் துறை சுனக்கத்தோடு இல்லாமல் விழித்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

தலைநகரின் மிக முக்கிய பகுதியாக விளங்கும் இராயப்பேட்டையில் அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டில், நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உடன் வந்தவர்களே தூக்கி சுமக்கின்ற காட்சியும்,

மறுபுறம், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீர் வாளியைக் கொண்டு முட்டு… pic.twitter.com/g74SF26eQN

— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl)

 

இச்சம்பவத்துக்கு பிறகாவது அரசு செவி மடுத்து சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து, இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு தொடராத வகையில் “செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். அரசு மருத்துவமனைகள் ஏழை - எளிய மக்களின் உயிர் நிவாரணி. அதன்மீதுள்ள நம்பிக்கை பறிபோகாமல் காக்க வேண்டியது அரசின் கடமை என  விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

click me!