நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனை எதிர்த்து போட்டி; நடிகர் மன்சூர் அலிகான் திடீர் அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Jan 10, 2024, 8:09 PM IST

தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.


நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றிபெற்றார். ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். 

நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஆலமரமான, 

Tap to resize

Latest Videos

மதுரையில் சத்தமில்லாமல் ரூ.4 கோடி நிலத்தை அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்; பள்ளி நிர்வாகத்தினர் நெகிழ்ச்சி

அன்பின் ஆண்டாளான, ''அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி, ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ல், நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி, இந்தா வர்ரேன்டா” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!