புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டது என் அதிர்ஷ்டம்.. புதுச்சேரியில் வந்திறங்கியதும் தமிழிசையின் முதல் பேட்டி.!

By Asianet TamilFirst Published Feb 17, 2021, 9:02 PM IST
Highlights

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டதை என்னுடைய அதிர்ஷ்டமாக நான் கருதுகிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை, அந்தப் பொறுப்பிலிருந்து  நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வழங்கியும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி ஆளுநராக தமிழிசை நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக தமிழிசை இன்று புதுச்சேரிக்கு வருகைப் புரிந்தார்.  அவருக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அப்போது தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரி மக்களை நான் நேசிக்கிறேன். புதுச்சேரி மக்களும் என்னை நேசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டதை என்னுடைய அதிர்ஷ்டமாக நான் கருதுகிறேன். சட்டவிதிகளுக்கு உட்பட்டு இந்தப் பொறுப்பில் செயல்படுவேன். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் உள்ளது” என்று தமிழிசை தெரிவித்தார்.

click me!