நானும் 20 ஆண்டுகளாக பிசிஆர் சட்டத்திற்கு எதிராகவே பேசி வந்துள்ளேன். ருத்ரதாண்டவம் பார்த்த கிருஷ்ணசாமி பகீர்.

Published : Sep 28, 2021, 10:07 AM ISTUpdated : Sep 28, 2021, 10:09 AM IST
நானும் 20 ஆண்டுகளாக பிசிஆர் சட்டத்திற்கு எதிராகவே  பேசி வந்துள்ளேன். ருத்ரதாண்டவம் பார்த்த கிருஷ்ணசாமி பகீர்.

சுருக்கம்

அவரைத் தொடர்ந்து பேசிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி படத்தின் கரு போதைப்பொருளுக்கு எதிரானதாகவே இருக்கிறது, போதைப்பொருள் மூலமாக குடும்பம் சமுதாயம் பாதிப்படைகிறது என்பதை ருத்ரதாண்டவம் கூறியுள்ளது. 

ருத்ரதாண்டவம் திரைப்படம் பட்டியல் இன மக்களையும், கிறிஸ்தவர்களையும் பெருமைப்படுத்தி உள்ளது என்றும், பட்டியலின மக்களின் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.

திரௌபதி படத்தை இயக்கிய ஜி.மோகன் நடிகர் ரிச்சர்ட், கௌதம்மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி ஆகியோரைக் கொண்டு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு இந்த திரைப்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ஆகியோர் திரைப்படம் பார்த்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், 

ருத்ரதாண்டவம் திரைப்படம் பட்டியலின மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது என கூறப்பட்டு வருகிறது ஆனால் உண்மையிலேயே பட்டியலின மக்கள் நேர்மை நியாயத்திற்கு துணை நிற்பதை இந்தப்படம் காட்சிப்படுத்துகிறது ரீச்செட் திரௌபதியை காட்டிலும் சிறப்பாக நடித்துள்ளார், கிறிஸ்தவ மோசடி, மதமாற்றம் சக்திகள் ஏமாற்றுகிறார்கள் என ஒரு கதாபாத்திரமாக வந்துள்ளனர். இந்தப்படம் தேசபக்தி கொண்ட கிறிஸ்தவர்களை பெருமைப்படுத்தி உள்ளது, மதம் மாறிய பிறகும் இந்து என்கிற சான்றிதழ் மூலம் பட்டியல் சமூகத்திற்கான பிசிஆர் சட்டத்தை பயன்படுத்துவதை இந்த திரைப்படம் கண்டித்துள்ளது. இந்த படத்தை பட்டியல் இன மக்களும் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி படத்தின் கரு போதைப்பொருளுக்கு எதிரானதாகவே இருக்கிறது, போதைப்பொருள் மூலமாக குடும்பம் சமுதாயம் பாதிப்படைகிறது என்பதை ருத்ரதாண்டவம் கூறியுள்ளது. பி.சி.ஆர் ஐ தவறாக பயன்படுத்துவது, மதமாற்றம் குறித்து படத்தில் பேசியுள்ளனர். படத்தில் மதமாற்றம் குறித்து அதிகம் பேசவில்லை, அது மேலோட்டமாக இடம்பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நான் பிசிஆர் சட்டத்திற்கு எதிராகவே பேசி வந்துள்ளேன். பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வழக்குகளில்  வழக்கமான சட்டம் மூலமே தண்டனை பெறலாம் என கிருஷ்ணசாமி கூறினார். அவரின் இந்த பேச்சு தலித் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!