வெற்று ஆர்ப்பாட்ட அரசியல், விவசாயிகள் மத்தியிலும் நம்பிக்கை இழந்துவிட்டார் ஸ்டாலின்.. அண்ணாமலை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2021, 9:36 AM IST
Highlights

ஏனெனில் பாரதப்பிரதமரின்  விவசாயிகளுக்கான பல திட்டங்கள் பயிர்க்காப்பீடு,கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டியுள்ளன.தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, மசோதா நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார். 
 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் தமிழகத்தில் படுதோல்வி அடைந்துவிட்டது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- மத்திய அரசின் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்,விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு. இன்று திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது.ஆனால் போராட்டம் படுதோல்வியடைந்ததோடு,சில அரசியல்கட்சிகளைத்  தவிர எந்தவொரு விவசாயிகளும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயாராக இல்லை. 

ஏனெனில் பாரதப்பிரதமரின்  விவசாயிகளுக்கான பல திட்டங்கள் பயிர்க்காப்பீடு,கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டியுள்ளன. தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, மசோதா நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார். 25 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகம் விவசாயிகளின் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெற்று ஆர்ப்பாட்ட அரசியல் செய்யும் திமுக விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை  இழைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் வெங்காய உற்பத்தி, காய்கறிகள் உற்பத்தி அதிகமாவதால் விவசாயிகள் விளைபொருட்களை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இன்று கோவை மாநகரில் வெங்காய விலை ரூ.40. ஆனால் இடைத்தரகர்களிடம் ரூ.8க்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றி,தொழில் முனைவோர்களாக மாற்றியமைக்கும்.
வேளாண் சட்டங்களை புறக்கணிக்கும் தமிழக முதல்வர் விவசாயிகளின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வு தான் தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையாக தரவேண்டும். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!