விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபாகரனின் குடும்பத்தாருடன் பழகி வருவதால் இந்த தகவலை அவர்களது அனுமதியுடன் சொல்வதாக பழ. நெடுமாறன் கூறினார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது என்றவர் அவரது குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்று கூறினார்.
பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது என்னவென்றால், சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழ் ஈழ தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இதையும் படிங்க..ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டேனா.? ஆடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சூர்யா சிவா!
இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம், தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்த காலகட்டத்திலும், எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும், தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா ? என்ற கேள்வி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்டது.
அவர் இதுகுறித்து பேசிய போது, பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியவர் 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்க மாட்டார். எனவே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மக்கள் முன்பு தோன்றுவார் என்றால் அவர் வந்ததற்கு பிறகு பேசுவோம்.
என் தம்பி சின்னவன் பாலசுந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச் சென்று இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா/ எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன் . அவர் தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப்போகும் கோழை அல்ல என்று கூறினார்.
இதையும் படிங்க..பட்டினி சாவு ஒரு பக்கம்.. கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் - அரசியல் கட்சிகளின் சாதனை இதுவா.?