
கமலாலயம் சென்று விட வேண்டாம்
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கடந்த முறை நான் சட்டப்பேரவையில் பேசுவதற்கு முன்னரே அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டனர். இன்று நான் பேசுவதற்கு முன்னரே வெளிநடப்பு செய்து விடுவார்களோ என்று பயந்தேன். நேற்றும் வெளிநடப்பு செய்தார்கள் நல்லவேளை இன்று வெளிநடப்பு செய்யவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் தவறுதலாக என் காரில் ஏற முயற்சித்தார். அடுத்த முறை அவ்வாறு அவர் காரில் ஏற நினைத்தால் காரில் ஏறி செல்லலாம். ஆனால் தயவு செய்து கமலாலயம் சென்று விடாதீர்கள் என நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
கோயில்களில் திருநங்கைகளுக்கு பணி
இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ பன்னீர்செல்வம்,எங்களது கார் எம்ஜிஆர் மாளிகையை நோக்கி தான் செல்லுமே தவிர வேறு எங்கும் செல்லாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி மக்கள் தங்களது பிரச்சனைகளை திமுக தலைவரன மு க ஸ்டாலினால் தான் தீர்க்க முடியும் என நினைத்து தான் தமிழ்நாட்டு மக்கள் தான் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என கூறினார். தொடர்ந்து பேசியவர், தனது தொகுதிகளில் மகளிர் மற்றும் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார். திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ரேஷன் அட்டை போன்றவை வழங்குவதன் மூலமாக ஆதார் அட்டை வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.25 ஆயிரம் திருநங்கைகள் தமிழகத்தில் இருப்பார்கள் எனவும் ஆனால் அதில் 13,000 பேர் மட்டுமே பதிவு செய்யும் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். பதிவு செய்யாத மீதமுள்ள திருநங்கைகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் திருநங்கைகளுக்கு அரசு அலுவலர்கள் பணி ஒதுக்கீடு மற்றும் கோயில்களில் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாஜகவினர் பாராட்டே மிகப்பெரிய பாராட்டு
மாற்றுத்திறனாளிகளுக்கு தாட்கோ வங்கிகள் மூலம் தனி நிதி உதவி வழங்கி அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளி ஆணையராக மாற்றுத்திறனாளி ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை பிராஜக்டர் மூலம் காணொலி காட்சி வாயிலாக படங்கள் மற்றும் கதைகளை விளக்க வேண்டும் எனவும் இதன்மூலம் அவர்கள் எளிதில் அதனை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். தமிழக முதலமைச்சரை தேசிய அளவிலும் மாநில அளவிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரை வாழ்த்திய நிலையில் பாஜக வினர் முதலமைச்சரை Stalin more dangerous then Kalaignar என்ற பாராட்டையே மிகப்பெரிய ஒரு பாராட்டாக தான் கருதுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்