சாலை வசதி கேட்ட இளைஞருக்கு பளார்... வெறித் தனத்தை காட்டிய காங் எம்எல்ஏ.

By Ezhilarasan Babu  |  First Published Apr 21, 2022, 7:09 PM IST

காங்கிரஸ் எம்எல்ஏ தனது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு தொகுதி பிரச்சினை கூறிய இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைகிறார். 


சாலை வசதிகள் சரியில்லை என கோரிக்கை வைத்த இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா தொகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக காங்கிரஸ் கதை மாறியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கையில் வைத்திருந்த காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை கையில் வைத்துள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் பாஜகவின் கைக்கு சென்று விட்டன. இந்நிலையில் இழந்த பழைய செல்வாக்கை மீட்பதற்கான பகீரத முயற்சியில் அக்காட்சியின்  தலைமை ஈடுபட்டு வருகிறது.  ஆனால் அக்காட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் பொறுப்பற்ற முறையில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

Tap to resize

Latest Videos

தனது கிராமத்தில் சாலையை சீர் செய்து தரும்படி கோரிக்கை வைத்த இளைஞரை, காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பவகடா  சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் வெங்கடரமணப்பா. இவர் நீண்ட  நாட்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது காரில் ஏறுவதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரை வழிமறித்து தனது கிராமத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது எனவே அதை சீரத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  அவசரமாக  சென்ற தன்னை வழிமறித்த இளைஞரை எம்எல்ஏ  வெங்கடரமணா ஓங்கி கண்ணத்தில் பளார் என அறைந்தார்.

இதனை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் அந்த இளைஞர் நீங்கள் தானே எங்களது தொகுதி எம்எல்ஏ? உங்களிடம்தான் ஏங்கள் தொகுதி பிரச்சனைகளை கூறமுடியும், வேறு யாரிடம் சொல்வது, எங்களது குறைகளைக் கூறினால் எங்களை அடிப்பீர்களா என ஆவேசமாக கேட்டார். ஆனால் அவரை அங்கிருந்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர். இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில்  பதிவிட்டார். இந்நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

காங்கிரஸ் எம்எல்ஏ தனது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு தொகுதி பிரச்சினை கூறிய இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைகிறார். இதுதான் காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளை அணுகும் விதம் என தெரிவித்துள்ளது. தற்போது  காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். 
 

click me!