வீட்டு வாசலில் நின்றிருந்த பாஜக பிரமுகர் மர்ம கும்பலால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
வீட்டு வாசலில் நின்றிருந்த பாஜக பிரமுகர் மர்ம கும்பலால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான திட்டங்கள் ஆங்காங்கே மக்களால் எதிர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரச்சாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று வருகிறது.
அப்படியெனில் பாஜகவுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபட வில்லை என்றும், இதுவே பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்று பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ளூர் தலைவரான ஜிது சவுத்ரி சில மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி மயூர் விகார் பகுதியில் நேற்று மாலை ஜிது சவுத்ரி வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஜிது சவுத்ரியை நோக்கி சரமாரியாக சுட்டது. அதில் ஜிது சவுத்ரி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனைக் கண்ட பொது மக்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜிது சவுத்ரியில் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லி கிழக்கு பகுதியின் காவல் துணை ஆணையர் பிரியங்கா காஷ்யப் இது குறித்து கூறுகையில், ஜிது சவுத்ரி தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சுடப்பட்டார். அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். பின்னர் போலீசாரால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அவர் வரும் வழியிலேயே உயர்ந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதாவது காஜிப்பூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் நேற்று 8:15 மணிக்கு ஈடுபட்டிருந்தபோது ஜிது சவுத்ரி சுடப்பட்டதாக தகவல் கிடைத்தது. இச்சம்பவம் நடந்த இடத்தில் சில துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜிது சவுத்ரியின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்துள்ளது, 2 மர்ம நபர்கள் அவரை சட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஜக பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.