அண்ணா குறித்து பேசியது சரிதான் மன்னிப்பு கேட்க முடியாது - அண்ணாமலை திட்டவட்டம்

By Velmurugan s  |  First Published Sep 21, 2023, 6:12 PM IST

பேரறிஞர் அண்ணா குறித்து நான் பொய்யாக எதுவும் குறிப்பிடவில்லை. நான் சொன்ன அத்தனையும், உண்மை அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.


கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது.

சென்செக்ஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும். பாஜக கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். 

Latest Videos

undefined

தன்மானத்தை விட்டு அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை - அண்ணாமலை அதிரடி

ஏக மனதாக அனைத்து கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளனர். இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீட் உயர்த்தியுள்ளோம். இதில் ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை. சதி என்ற வார்த்தையை முதல்வர் எப்படி பயன்படுத்தலாம்? என கேள்வி எழுப்பினார்.

செல்லூர் ராஜூ சொல்வது போல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்? எனது தன்மானத்தை கேள்விக் குறியாக்கினால் பேசுவேன். அது எனது உரிமை. தன்மானத்தை விட்டு தந்து அரசியல் செய்ய மாட்டேன். எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. 

நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாறினால் வெற்றி கிடைக்கும் - அமைச்சர் உதயநிதி பேச்சு

தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா, அண்ணாவை தரைகுறைவாக நான் விமர்சிக்கவில்லை. எந்த கட்சிக்கும் இந்த கட்சி போட்டியில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதே இலக்கு. என் கட்சியை நான் வளர்க்கிறேன். திமுக விஷம் திமுகவை அடியோடு வெறுக்கிறேன்.

அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை தான் பேசுகிறேன். மேலும் மோடியை ஏற்றால் கூட்டணி இருக்கும். சனாதனம் எங்கள் உயிர் நாடி. சனாதனம் வாழ்க்கை கோட்பாடு, சனாதன தர்மம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார். 

click me!