அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Sep 21, 2023, 5:20 PM IST

அதிமுக ஆட்சில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் மட்டும் ஒட்டுவதாக முன்னாள் அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் பொன் விழா எழுச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நகரக் கழகச் செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில்  முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகன், தலைமை கழக பேச்சாளர்கள் கோபிகாளிதாஸ் மற்றும் சின்னராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னாள் அமைச்சர் வீரமணி பேசும்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் 520 வாக்குறுதிகள் கொடுத்து 99.9% வாக்குறுதியை நிறைவேற்றியதாக பொய்யான செய்தியை கூறி வருகின்றனர். 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து  தற்போது தகுதி அடிப்படையில் வழங்குவதாக கூறி எதையுமே நிறைவேற்ற முடியவில்லை.

Latest Videos

undefined

தன்மானத்தை விட்டு அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை - அண்ணாமலை அதிரடி

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்க முயற்சி செய்து வருவதாகவும் முழுமையாக கொடுக்க முடியவில்லை. இந்த மூன்று ஆண்டு காலத்தில் விலைவாசியை குறைபோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து தற்போது எல்லாவற்றிலுமே விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. 

சினிமாவை மிஞ்சும் சம்பவம்; கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்தது கருக்கலைப்பு - 5 பேர் கைது

புதிதாக மின் இணைப்பு பெற அதிமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் இருந்தது தற்போது 2500 ரூபாயாக உயர்த்திருக்கிறது. இந்த விடியா அரசு. அதிமுக ஆட்சியில் திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், கல்லூரி மாணவர்களுக்கு  மடிக்கணினி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கியது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மட்டுமே விடியா திமுக அரசு செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.

click me!