மொத்தமா தொலைச்சிட்டு நிற்கிறேன்... எல்லாம் உன்னால்தான் தினகரா... கடும் கோபத்தில் கொந்தளித்த சசிகலா..!

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2021, 11:07 AM IST
Highlights

கொஞ்சம் அனுசரித்து அவர்களை கைக்குள் வைத்திருக்க வேண்டாமா? இப்போது எல்லாம் கையை மீறி போய் விட்டது

சசிகலா சிறைக்கு சென்றதும், சில சட்டமன்ற உறுப்பினரக்ள் டி.டி.வி.தினகரனின் ஆசை வார்த்தைகளை நம்பி அவருக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் சட்டமன்ற பதவி உட்பட அனைத்தையும் இழந்து நடு ரோட்டில் நின்றது தான் மிச்சம். இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு தங்களை ஏமாற்றி விட்டார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் நடைபெறாது என்பதை உணர்த்த டி.டி.வி.தினகரன் பக்கம் இருந்த, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், புகழேந்தி ஆகியோர் தினகரனிடம் இருந்து விலகி அதிமுக, திமுக போன்ற கட்சியில் இணைந்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றால் மாற்றம் வரும் என எதிர்பார்த்த காத்திருந்தவர்கள், பின்பு சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த உடன் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் சசிகலா பக்கம் வந்து விடுவார்கள். அதிமுகவை சசிகலா கைப்பற்றி விடுவார் என எதிர்ப்பார்த்த டி.டி.வி.தினகரன் நடத்தும் அமமுக கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனதும், அவர் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த அன்று, அமமுக நிர்வாகிகள் மற்றும் சில ஊடகங்கள், ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வருகிறார், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்ல போகிறார், அதிமுக கொடி உள்ள மற்றறொரு அதிமுக நிர்வாகிகள் காரில் சசிகலா செல்கிறார் என பரபரப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர், ஆனால் ஒரே நாளில் அந்த பரபரப்பு அடங்கி, அடுத்த நாள் சசிகலா எங்கே இருக்கிறார் என்று கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தன்னை உடல்நலம் விசாரிக்க வருவார்கள் என எதிர்பார்த்த சசிகலாவை யாரும் கண்டு கொள்ளவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் யாரும் தன்னை கண்டு கொள்ளாத நிலையில், சில முக்கிய அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் சசிகலா, நான் தான் சின்னமா பேசுகிறேன் என அவரது குரலை கேட்டதும் ஒரு சிலர் தொலைபேசியை துண்டித்துள்ளனர். மேலும் சிலர் மரியாதை நிமித்தமாக உடல்நலம் விசாரித்துள்ளனர். அப்படி விசாரித்தவர்களிடம் அரசியல் பேசிய சசிகலாவிடம் வெளிப்படையாகவே அரசியல் பேச வேண்டாம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து சசிகலா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டார்ச்சர் கொடுப்பதை தாங்கி கொள்ள முடியாமல் சசிகலா தொலைபேசி என்னை பிளாக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து நொந்து கொண்ட சசிகலா, ஒரு கட்டத்தில் டி.டி.வி.தினகரனை அழைத்து கடுமையாக திட்டியுள்ளார். உன்னிடம் கட்சியையும் ஆட்சியைம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு கிளம்பினேன். ஒரே மாதத்தில் இரண்டையும் பறி கொடுத்து விட்டாய். இப்போது இருக்கும் அமைச்சர்களுக்கு பதவி வாங்கிக் கொடுத்ததே நான் தான். ஆனால் அதையெல்லாம் மனதில் வைக்காமல் என்னை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் உன்னைத்தான் கை நீட்டுகிறார்கள். கொஞ்சம் அனுசரித்து அவர்களை கைக்குள் வைத்திருக்க வேண்டாமா? இப்போது எல்லாம் கையை மீறி போய் விட்டது’’ எனக் கொதித்திருக்கிறார் சசிகலா. 

click me!