இந்திய வரலாற்றில் முதன்முறையாக... ரூ-100 ஐ தாண்டியது பெட்ரோல் விலை..!

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2021, 10:36 AM IST
Highlights

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத விலையேற்றமமாக ராஜஸ்தானில் கங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 அதிகரித்துள்ளது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து உயர்தப்பட்டு வருலதால், மக்கள், வணிகர்கள், வாகன ஓட்டிகள் கடுமையான இன்னல்களை சந்திக்கின்றனர்.

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் லிட்டருக்கு 24 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன.

 

அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4 -ஆவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், மக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91.68ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.85.01 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத விலையேற்றமமாக ராஜஸ்தானில் கங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 அதிகரித்துள்ளது. அங்கு டீசல் ஒரு லிட்டர் 92.13 என்ற விலைக்கு விற்பனையாகிறது. 
 

click me!