#BREAKING பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. மே 3 முதல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Published : Feb 17, 2021, 10:08 AM ISTUpdated : Feb 17, 2021, 10:12 AM IST
#BREAKING பிளஸ்  2  பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. மே 3 முதல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் பிளஸ்  2  வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி முடிவடைகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பிளஸ்  2  வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி முடிவடைகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், பள்ளிகளில் ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப் படுகின்றன. செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, பொதுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை 

மே 3ம் தேதி  தமிழ்பாடம் 

மே 5ம் தேதி ஆங்கிலம்

மே 7ம் தேதி  கணினி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்

மே 11ம் தேதி  இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

மே 17ம் தேதி கணிதம், விலங்கியல், வேளாண் அறிவியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு 

மே 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு

மே 21ம் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!