பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... கபட நாடகம்.. இதை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.. கொதிக்கும் ஸ்டாலின்..!

Published : Feb 17, 2021, 09:42 AM IST
பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... கபட நாடகம்.. இதை  மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.. கொதிக்கும் ஸ்டாலின்..!

சுருக்கம்

போட்டி முதல்வராக செயல்பட அனுமதித்து தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

போட்டி முதல்வராக செயல்பட அனுமதித்து தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு. 

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் தடுத்து - ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி - அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம். 

புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை - இறுதிக் கட்ட முயற்சி! துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பா.ஜ.க. செய்த  தரம் தாழ்ந்த அரசியலையும் - அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என காட்டமாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!