காவிரி டெல்டாவிலும் வரவேற்பு இல்லை..! சுற்றி சுற்றி சோர்ந்து போன டிடிவி..! டென்சனில் சசிகலா..!

By Selva KathirFirst Published Feb 17, 2021, 11:04 AM IST
Highlights

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய போது கொடுக்கப்பட்ட வரவேற்பு இயல்பாக கிடைத்தது இல்லை என்பது சசிகலாவிற்கு நன்றாகவே தெரியும்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து பெங்களூரில்இருந்து சென்னை திரும்பிய போது கொடுக்கப்பட்ட வரவேற்பு இயல்பாக கிடைத்தது இல்லை என்பது சசிகலாவிற்கு நன்றாகவே தெரியும்.

சிறை தண்டனை முடிந்து சசிகலா தமிழகம் திரும்பி பத்து நாட்கள் கடந்துவிட்டது. ஆனால் தற்போது வரை தமிழக அரசியலில் சசிகலாவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. முன்னாள் எம்எல்ஏவும் பாலியல் வழக்கு குற்றவாளியுமான நாஞ்சில் முருகேசன் என்பவர் மட்டுமே இதுவரை சென்னை தியாகராயநகர் வந்து சசிகலாவை சந்தித்து சென்றுள்ளார். மற்றபடி சசிகலா சென்னையிலேயே இருந்தாலும் ஒரு வட்டச் செயலாளர் கூட சசிகலாவை சென்று சந்திக்க முடியவில்லை. அமமுகவில் தற்போது நிர்வாகிகளாக உள்ள பலரும் அதிமுகவில் சாதாரண நிலையில் இருந்தவர்கள்.

அவ்வப்போது அமமுகவில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை மட்டும் சந்தித்து சசிகலா பேசுகிறார். அவர்களிடம் கள நிலவரம் குறித்து வெளிப்படையாக கேட்டு சசிகலா தெரிந்து கொள்வதாக கூறுகிறார்கள். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து சசிகலாவை தற்போது வரை யாருமே தொடர்பு கொள்ளவில்லை. தன்னிடம் செல்போனிலாவது பேசுவார்கள் என்று காத்திருந்த சசிகலாவிற்கு கடந்த பத்து நாட்களாக தினந்தோறும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதே போல் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தன்னை வந்து சந்திப்பார்கள் என்றும் சசிகலா எதிர்பார்த்தார்.

ஆனால் அப்படியும் யாரும் வரவில்லை. இதனால் தான் சென்னையில் இருந்து புறப்பட்டு தனது சொந்த ஊரானா தஞ்சை பக்கம் செல்லலாம் என்று அவர் முடிவுக்கு வந்தார். வழக்கமான பயணமாக இல்லாமல் பெங்களூரில் இருந்து திரும்பிய போது தனக்கு கிடைத்த வரவேற்பு காவிரி டெல்டா மாவட்டங்களிலும்  கிடைக்க வேண்டும் என்று சசிகலா எதிர்பார்க்கிறார்கள். இதனால் தான் கடந்த மூன்று நாட்களாக அம்மாவட்டங்களில் முகாமிட்டு தினகரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த அளவிற்கு சசிகலா மீது யாருக்கும் பெரிதான அபிமானம் இல்லை.

எனவே வழக்கம் போல் தங்களது பாணியில் பெய்டு வரவேற்பு என்று சொல்லப்படும் பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வரும் வேலையில் தினகரன் தரப்பு இறங்கியுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை வரும் வரை தனக்கு வரவேற்பு கொடுத்தவர்கள் யாருமே அதிமுகவினர் இல்லை என்பது சசிகலாவிற்கு நன்றாக தெரியும். மேலும் அந்த வரவேற்பு இயல்பான வரவேற்பு இல்லை பணம் கொடுத்தே ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும் அவர் தெரிந்தே வைத்திருக்கிறார். ஆனாலும் கூட இது போன்ற சீன்கள் இலலை என்றால் அரசியலில் நீடிக்க முடியாது என்பதால் அதனை ஏற்றுக் கொண்டார்.

இந்த வரவேற்பை பார்த்து தான் பிறகு செல்லும் இடங்களில் தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் சசிகலா. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. மேலும் தினரகனும் மூன்று நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. மேலும் தாங்கள் சார்ந்த சமுதாய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து பேசியும் கூட தினகரன் தரப்பு எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கவில்லை. இதனால் வழக்கம் போல் தங்கள் பாணியில் அமமுக தொண்டர்களை வைத்து வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

click me!