
ஜெயலலிதாவின் மகன்தான் நான் என தீபா கணவர் மாதவன் பகீர் தகவலை கிளப்பினார். செய்தியாளர் 3 வினாடி திகைத்து நிற்க, தீபா மருமகள் என்றால் நான் மகன் முறைதானே அதை கூறினேன் என மாதவன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆளாளுக்கு நான் ஜெயலலிதா மகன் அல்லது மகள் என்று வதந்திகளை கிளம்பி வருவது வாடிக்கையாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறந்த என்னை தத்து கொடுத்து விட்டனர். சசிகலாவின் ஆட்களால் எனக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த பின்பு அவர் பொய் சொன்னார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், ப்ரியா மகாலட்சுமி என்னும் பெண், என் தாயார் ஜெயலலிதா. என் தந்தை எம்.ஜி.ஆர் என கூறி பரபரப்பை கிளப்பினார்.
அதுவும் பித்தலாட்டம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவின் கணவர் மாதவன் ஜெயலலிதாவின் மகன்தான் நான் என பகீர் கிளப்பியுள்ளார்.
எம்.ஜெ.தி.முக நிறுவனர் மாதவன்(தீபா) தனியார் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
ஜெயலலிதாவின் மகன்தான் நான். தீபா மருமகள் என்றால் நான் மகன் முறைதானே அதை கூறினேன்.
எனக்கான அரசியல் பின்புலம் ஜெயலலிதாவின் குடும்பத்தில் இணைந்தபிறகு தான் அதிகமானது.
மக்களையும் அதிமுக தொண்டர்களையும் நம்பியே கட்சி தொடங்கி உள்ளேன்.
எனக்கும் தீபாவுக்கும் பிரச்சனையே கிடையாது. தீபாவிற்கு எதிராக நான் பேசியதே கிடையாது.
என்னை யாரும் வீட்டில் இருந்து துரத்தவில்லை.
நான் கட்சி தொடங்கியுள்ளதால் பேரவையும் கட்சியும் ஒன்றாக இருக்க வேண்டாம் என்று விலகினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.