அதிமுக அலுவலகம் இபிஎஸ் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டிலே நான் திருடுவேனா? திருப்பி அடிக்க ஆரம்பித்த ஓபிஎஸ்.!

By vinoth kumarFirst Published Aug 30, 2022, 6:40 AM IST
Highlights

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவை கைப்பற்றுவதற்கான அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர்.  நாளுக்கு நாள் ஓபிஎஸ் ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. 

எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி என்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவை கைப்பற்றுவதற்கான அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர்.  நாளுக்கு நாள் ஓபிஎஸ் ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. 

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் 80க்கும் மேற்பட்ட கார்களில் 500 அதிமுகவினர் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் ரங்கராஜ் திருமங்கலம் திருப்பரங்குன்றம் தொகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதையும் படிங்க;- ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

இதனையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ்;- தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக தான். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தொண்டர்கள் இயக்கமாக மாற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் எக்கு கோட்டையாக அதிமுகவை மாற்றினார். கவுரமான பொதுக்குழுவில் சி.வி. சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல். 

ஜூன் 23ம் தேதி காலை 10 மணிக்கு நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு என் வீட்டை கடந்து காலை 8  மணிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். என்னை பொதுக்குழு கூட்டத்தில் வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் இபிஎஸ்க்கு ஏழு இடங்களில் வரவேற்பு கொடுத்து செயற்கையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். போலீசார் உதவியுடன் கூட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகம் சென்ற போது  200 இருக்களை போட்டு அமர்ந்து, தலைமை கழகத்தை பூட்டி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு யார் தலைமை கழகத்தை பூட்ட அதிகாரம் கொடுத்தது? இது யார் வீட்டு சொத்து, எடப்பாடி பழனிசாமியின் அப்பன் வீட்டு சொத்தா? ஜானகி அம்மாள் தன்னுடைய சொத்தை கழகத்திற்காக எழுதிக் கொடுத்தார், இது அவர் கொடுத்த சொத்து, பொதுக்குழு அங்கு நடக்கும் போது அங்கு போகாமல் இவர்களுக்கு இங்கு என்ன வேலை? நான் திருடிச் சென்று விட்டேன் என்று சொல்கிறார்கள்,  எதற்கு நான் திருடப்போகிறேன் என் வீட்டில் நான்  திருடுவேனா?

இதையும் படிங்க;-  சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க ஓபிஎஸ் திட்டம்.. ஜெசிடி பிரபாகரன் அதிரடி தகவல்.

என்னை 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக்கினார். பின்னர் அவர் மீதும் கட்சி மீதும் எனது விசுவாசம் காரணமாக 13 ஆண்டுகள் கழித்து 2014ம் ஆண்டு மீண்டும் என்னை முதல்வர் ஆக்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார், இபிஎஸ் தயாரா? இரண்டு பேரும் தொண்டர்களை சந்திக்கலாம். அவர்கள் முடிவு செய்யட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள்.  அதற்கு மக்களே முடிவு செய்யப்பட்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 
 

click me!