முகச்சிதைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமி... நேரில் சென்று நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!!

Published : Aug 30, 2022, 12:01 AM IST
முகச்சிதைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமி...  நேரில் சென்று நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். 

சென்னை அடுத்த ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதி சேர்ந்த ஸ்டீபன் ராஜ்- சௌபாக்கியா தம்பதியினரின் மூத்த மகள் டானியா. இவருக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம், முழுவதும் சிதையத் தொடங்கியது. இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறுமி தானியாவுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு குட்டி சுவராகியுள்ளது... அண்ணாமலை கடும் விமர்சனம்!!

இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி தானியா அனுமதிக்கப்பட்டார். அங்கு 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிறுமிக்கு 10 மணி நேரம் முக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து சிறுமி தானியா குழந்தைகள் வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்ய தடையா? மீண்டும் பரபரப்பு

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டானியாவை முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர்களால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், 6 ஆவது நாளான இன்று சிறுமி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!