நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்- மம்தா; பாஜகவை எதிர்க்கவா..? காங்கிரசை அழிக்கவா.? பகீர் பின்னணி.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 5:42 PM IST
Highlights

மம்தா பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறாரா? அல்லது காங்கிரசை பலவீனப்படுத்த விரும்புகிறாரா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து கோவா மாநில  காங்கிரஸ் தலைவர் ஆதித் சவுத்ரி கூறுகையில், மம்தா பாஜகவை தோற்கடிக்க அல்ல காங்கிரஸை அழிக்க பாடுபடுகிறார் என விமர்சித்துள்ளார்

நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன், ஆனால் என் மதம் குறித்து எனக்கு நற்சான்று கொடுக்கும் தகுதி பாஜகவுக்கு இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தை குறி வைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த

ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை வென்று மகத்தான வெற்றியை பதிவு செய்தார் மம்தா, இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில்  கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்க உள்ளது. அந்த மாநிலத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு "கோஞ்ச்சி நவி சாகல் "  " கோவாவில் புதிய விடியல்" என்ற பெயரில் கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த டெரெக் ஓ பிரையன், பாபுல் சுப்ரியோ மற்றும் செளகதா ராய்  போன்ற தலைவர்களை கோவாவில் களமிறக்கியுள்ளார் மம்தா. 

அதேபோல் கடந்த ஜூன் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்த்தப்பட்ட பிறகு மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி கட்சியை பிராந்திய ரீதியில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான  கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கவனம் அனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் சிறிய மாநிலங்களில் மீது இருந்து வருகிறது. குறைந்த அளவிலான சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் அந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற முயற்சியில் இறங்கி உள்ளது. குறிப்பாக பிஜேபி அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளால் ஆளப்படுகின்றன மாநிலங்களில் மம்தா பானர்ஜி களம் காண வியூகம் வகுத்து வருகிறார். இதுகுறித்து மேடைதோறும் பேசி வரும் அபிஷேக் பானர்ஜி, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதில்  திரிணாமுல் காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

குறிப்பாக பிரதமர் மோடியை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி யால் மட்டுமே முடியும் என்ற பிரச்சாரத்தை திருணாமுல் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி ஒரு தேசியத் தலைவராகவும், பிரதமர் மோடிக்கு எதிராக நம்பகமான முக்கிய தலைவராகவும் முன்னிறுத்தும் வகையில் திருணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது. இதன் வெளிப்பாடு மம்தா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் காங்கிரஸால் பாஜகவை எதிர்த்து போராட முடியாது என்று விமர்சித்து வருகின்றனர். பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்தும் நம்பகத்தன்மையும், ஈர்ப்பு மம்தா பானர்ஜிக்கு மட்டுமே இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஊடகங்கள் பேச தொடங்கியுள்ளன. அதேபோல் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர், மம்தா பானர்ஜியின் வருகையால் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸின் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மம்தா பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறாரா? அல்லது காங்கிரசை பலவீனப்படுத்த விரும்புகிறாரா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து கோவா மாநில  காங்கிரஸ் தலைவர் ஆதித் சவுத்ரி கூறுகையில், மம்தா பாஜகவை தோற்கடிக்க அல்ல காங்கிரஸை அழிக்க பாடுபடுகிறார் என விமர்சித்துள்ளார். 

இந்நிலையில்  கோவாவில் தனது பிரச்சாரத்தை துவங்கிய மம்தா பானர்ஜி, திருணாமுல் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கோவாவுக்கு உரிய பாரம்பரியமும் கலாச்சாரமும் கட்டி காப்பாற்றப்படும், டில்லியில் நடக்கும் அராஜகம் கோவாவில் இனி நடக்க சாத்தியமில்லை, கோவா மக்கள் தைரியத்துடனும், தலை நிமிர்ந்து பெருமையுடனும் வாழ திரிணாமுல் காங்கிரஸ் பாடுபடும். நான் உயிரை விட்டாலும் விடுவேன், ஒருபோதும் பிரிவினையை தூண்ட மாட்டேன். நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன், ஆனால் என் மதம் குறித்து நற்சான்று வழங்க பாஜகவுக்கு ஒருபோதும் தகுதி இல்லை என அவர் ஆவேசமாக பேசியுள்ளார். 
 

tags
click me!