தேமுதிக அதிமுக மற்றும் பாஜக இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவி தருபவர்களுடன் கூட்டணி என்று பிரேமலதா கூறியதாக தகவல் வெளியானது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான தேமுதிக நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியின் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில், திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. ஆனால், எதிர்கட்சியான அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், அமமுக, புதிய நீதி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தொடர்ந்து தோல்வி முகம்: கோட்டை விட்டாரா எடப்பாடி பழனிசாமி?
இதெல்லாம் ஒரு புறம் இருக்க தேதிமுக, பாமக உள்ளிட்ட யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர் என்ற எதிர்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. தேமுதிக அதிமுக மற்றும் பாஜக இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவி தருபவர்களுடன் கூட்டணி என்று பிரேமலதா கூறியதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: மக்களவை தேர்தலில் களம் காணும் ஜான் பாண்டியன் மகள்? யாருடன் கூட்டணி?
இந்நிலையில் இன்று தேமுதிகவின் கொடிநாள் கொண்டாடப்படுவதையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து செய்தியார்களுக்கு பேட்டியளித்த அவர், 14 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை வேண்டுமென நான் கேட்கவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூறிய கருத்தையே தெரிவித்தேன். யாருடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வெளிப்படையாகத்தான் பேச்சுவார்த்தையை தொடங்குவோம். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தொடர்பாக அடுத்து நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.