தமிழக மக்களுக்கு நான் அடிமை, ஆனால், அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன்.. தெறிக்கவிட்ட சசிகலா.

Published : Feb 08, 2021, 06:50 PM ISTUpdated : Feb 08, 2021, 06:53 PM IST
தமிழக மக்களுக்கு நான் அடிமை, ஆனால், அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன்.. தெறிக்கவிட்ட சசிகலா.

சுருக்கம்

இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழியில் வாணியம்பாடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது. அவசரமாக ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும், 

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழியில் வாணியம்பாடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா இவ்வாறு பேசினார். 

4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு சாலை நெடிகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசூர் முழுவதும் 2000 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வந்தார்.  ஜனவரி 27 அன்று விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். 

சசிகலா உறவினரான இளவரசியும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று பெங்களூரிலிருந்து அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தார். சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி போலீசாரால்  அகற்றப்பட்டது,  இதனை யடுத்து, அதிமுக கொடியுடன் கூடிய வேறொரு காரில் சசிகலா பயணிக்கிறார்.  இதனால் சசிகலா மீது காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று, சசிகலா காரில் அதிமுக கொடியை அகற்றபடவில்லை, அதற்காக கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கினர், அதை அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன்பெற்றுக் கொண்டார். 

ஓசூரின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்தது. தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில் அமமுகவினர் சார்பில் கொடி, தோரணங்கள், பதாகைகள், மேள தாளங்களுடன் தயாராக இருந்த நிலையில் அவருக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். ஒசூர் மாநகரின் 4 இடங்களில் அமமுக சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழியில் வாணியம்பாடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது. அவசரமாக ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும், நிச்சயமாக நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். 

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா?  என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதில் அளித்தார். மக்களை மிக விரைவில் சந்திப்பேன், கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது, பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது, சசிகலா புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை, அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்றார். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் எனவும் அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!