சசிகலா வருகைக்கு இவ்வளவு பில்டப்பா?! யப்பா!

By Asianet TamilFirst Published Feb 8, 2021, 5:16 PM IST
Highlights

சசிகலா தமிழகம் வருகிறார் என கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தவன்னம் இருந்தன,அவரை 500 முதல் 1000 கார்கள் பின்தொடரும் என செய்திகள் வந்த நிலையில், வெறும் 10 கார்கள் மட்டுமே அவரை தற்போது பின்தொடர்ந்து வந்தன..

சசிகலா தமிழகம் வருகிறார் என கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன,அவரை 500 முதல் 1000 கார்கள் பின்தொடரும் என செய்திகள் வந்தன. ஆனால் வெறும் 10 கார்கள் மட்டுமே அவரை தற்போது பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. செல்லும் இடத்தில் எல்லாம் கூட்டம் அள்ளும் என கூறப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதல் லொகேசனிலே வெறும் 200-250 பேர் தான் இருந்தனர். அதிலும் பாதி பேர் பத்திரிக்கை செய்தியாளர்கள் தான். இதற்கு தான் இந்த பில்டப்பா என தோன்றுகிறது. தொடர்ந்து நடக்கும் துர் சம்பவங்கள்... சென்னை திரும்பும் சசிகலாவுக்கு நேரம் சரியில்லையா? 

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துகொண்டு இருக்கும் சசிகலாவுக்கு நேரம் சரில்லை போலிருக்கிறது. காலை கர்நாடக எல்லையில் இருந்து தமிழகம் வரும் வழியில் ஒரு கார் ,சசிகலா வரிசயில் வந்த கார்களை முந்த முயற்சிக்கும்போது சசிகலா வந்த கார் மீது லேசாக மோதியது. பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் உள்ளே இருந்து சசிகலா அதிருந்து போனார் இதையடுத்து தமிழக எல்லைக்கு வந்தபின்னர் அந்த வாகனத்தில் இருந்து வேறு வாகனத்துக்கு மாறினார். இதையடுத்து வரும் வழியில் முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

சாமி தரிசனத்திற்கு பின் அனைத்தும் சரியாகிவிடும என்று நம்பியிருந்த சசிகலாவிற்கு பேரியாக அமைந்தது மற்றுமொரு சம்பவம். சசிகலா கிருஷ்ணகிரியை கடந்து வந்துகொண்டு இருக்கும்போது, கட்சியின் சில தொண்டர்கள் பட்டாசு வெடிக்க முயற்சித்தனர். அப்போது, அருகே இருந்த இரண்டு கார்கள் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசம் ஆனது . ஏற்கனவே தனது கார் விபத்துகுள்ளானதால் வாகனத்தை மாற்றிய சசிகலா இந்த சம்பவத்தால் மனம் நொந்து போனார். இதையடுத்து, சசிகலா மீண்டும் தான் வந்த காரை இரண்டாவது முறையாக மாற்றி பெரிய வேன் போன்ற வாகனத்தில் பயணத்தை தொடர்ந்தார். 

சசிகலா 7ம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிவித்து வந்த நிலையில், திடீரென்று 8ம் தேதி பெங்களூரிலிருந்து புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. சசிகலாவிற்கு 7ம் தேதி உகந்த நாள் இல்லை என்று சோதிடர்கள் தெரிவித்ததால் சசிகலா புறப்படும் தேதி 8ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அ.ம.மு.கவினர் தெரிவித்தனர். இந்நிலையில் 8ம் தேதியும் சசிகலாவிற்கு ஏற்ற நாளாக அமையவில்லை. சசிகலா பெங்களூரூவிலிருந்து புறப்பட்டது முதல் இதுவரை இரண்டு விபத்துகள் நடைபெற்றுள்ளது நல்ல சமிக்கையாக இல்லை என்று சசிகலாவிற்கு நெருக்கமானவர்களே தெரிவித்தனர். 9ம் தேதியே சசிகலாவிற்கு உகந்த (லக்கி/ lucky) நாளாக இருக்கும் போது, டி.டி.வி தினகரனனின் திட்டதின்படியே தேதி மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

click me!