டாஸ்மாக் பக்கம் திரும்பினால் புண்ணியம் கிடைக்கும்... சசிகலாவுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்..!

Published : Feb 08, 2021, 05:07 PM IST
டாஸ்மாக் பக்கம் திரும்பினால் புண்ணியம் கிடைக்கும்... சசிகலாவுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்..!

சுருக்கம்

சசிகலா விடுதலையாகி தமிழகம் திரும்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகிறனர்.

சசிகலா விடுதலையாகி தமிழகம் திரும்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகிறனர்.

சசிகலா சென்னை வந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பராமரிப்பு காரணமாக ஜெயலலிதா நினைவிடத்தை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகமும் மூடப்பட்டது. இவ்வாறு சசிகலாவுக்கு பல வகைகளில் செக் வைக்கப்பட்டு வருகிறது. இது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம்.

ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம்  சசிகலாவுக்காக செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்’’ என அவர் சசிகலாவுக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!