விவசாயிகள் கலவரத்திற்கு இதுதான் காரணம்.. அழகிரி பரபரப்பு குற்றஞ்சாட்டு..

Published : Feb 08, 2021, 04:01 PM ISTUpdated : Feb 08, 2021, 04:02 PM IST
விவசாயிகள் கலவரத்திற்கு இதுதான் காரணம்.. அழகிரி பரபரப்பு குற்றஞ்சாட்டு..

சுருக்கம்

குடியரசு தினத்தன்று டெல்லி வன்முறை ஏற்பட்டது,  அதில் காவல்துறையினரைப் போல் உருவமாறி பாஜகவினர் சென்ற  காரணத்தினால்தான் வன்முறை ஏற்பட்டது.  

சென்னை கொடுங்கையூர் குப்பை வளாகம் அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது சென்னை மண்டலத்தில் 15 மண்டலங்களில் 9 மண்டலத்தில் குப்பைகள் இங்கு கொட்டப்படும் நிலையில் இந்த குப்பைகளில் மருத்துவ கழிவுகளும் கடல் சார் கழிவுகள் கொட்டப்பட்டு அடிக்கடி ஏற்படுவதால் நச்சு புகைகள் கிளம்பி உடல் உபாதைகள் நோய்த்தொற்றுகள் சர்ம வியாதிகள் ஏற்படும் நிலை பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இக்கையெழுத்து இயக்கத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:  கடந்த பல ஆண்டுகளாக இந்த குப்பை கிடங்கால்  ஏராளமான பொதுமக்கள் பல நோய்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 60 நாட்கள் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குடியரசு தினத்தன்று டெல்லி வன்முறை ஏற்பட்டது,  அதில் காவல்துறையினரைப் போல் உருவமாறி பாஜகவினர் சென்ற காரணத்தினால்தான் வன்முறை ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் நடந்த சம்பவம் போலவே தில்லியிலும் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வந்த போது அப்போது கேட்காத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை ரத்து செய்யப்படும் என அறிவித்த பிறகு விவசாய கடம் ரத்து என அறிவிப்பு வெளியிடுகிறார்.

ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 இன் கீழ் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார், எங்கள் பொருத்தவரையில் ஸ்டாலின் சொல்லியது தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து உள்ளார் என கூறினார்

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!