பாஜக, பாமக, தேமுதிகவுக்கு இத்தனை தொகுதிகள்தான்..? கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்கப்போகும் ஷாக்..?

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2021, 11:24 AM IST
Highlights

தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் எனவும் பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கான ஆலோசனை மற்றும் வியூகங்களில் பாஜக தேசியத் தலைமைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அமித்ஷா, மோடி, ஜேபி நட்டா என அடுத்தடுத்து தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.  

வரும் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட உள்ளதால், அங்கு வைத்து அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த தினமான அன்று, மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகளை வழங்குவது என அதிமுக புதிய பட்டியலை தயாரித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் வேகமாக நெருங்கி வருகிறது, எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என அதிமுக- திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. 

இந்த முறையும் வழக்கம் போல அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது, இந்த இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன. அதேநேரத்தில் தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாளைய கனவு, எனவே வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் இந்த தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் எனவும் பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கான ஆலோசனை மற்றும் வியூகங்களில் பாஜக தேசியத் தலைமைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அமித்ஷா, மோடி, ஜேபி நட்டா என அடுத்தடுத்து தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.  

எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு அதிகளவில் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை அறிவித்துள்ளன. அதேபோல கூட்டணியை பொறுத்தவரையில் முக்கிய கட்சியான பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின்னர் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழக பாஜக அதிமுக கூட்டணியில் மொத்தம் 60 இடங்களை குறிப்பிட்டு கோரியுள்ளதாக கூறப்படுகிறது, அதில் 40 இடங்களையாவது கட்டாயம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு அதிக தொகுதிகளை வழங்கும் அதே நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக மிக கவனமாக இருந்து வருகிறது, எனவே பாஜகவுக்கு மொத்தம் 20 தொகுதிகளை வழங்குவது என அதிமுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் மற்றொரு முக்கிய கட்சியான பாமகவுக்கு 25 தொகுதிகளும், தேமுதிக 10 தொகுதிகளில், பாமக 7 தகுதிகளும், புதிய தமிழகத்துக்கு இரண்டு எனவும் அதிமுக பட்டியல் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 21ஆம் தேதி டெல்லியில் அதிமுக தலைமை அலுவலகம்  திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து  கொள்ள உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அப்போதைய பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு கையொப்பம்மாக உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயல்லிதா பிறந்த தினமான 24ஆம் தேதிக்குள் பிற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!