#BREAKING ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்.. 11 ஆண்டுகளுக்கு பின் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

By vinoth kumarFirst Published Feb 16, 2021, 11:14 AM IST
Highlights

கடந்த 2009 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2009 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த, 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்,  அதிமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். கடும் போட்டிகளுக்கு இடையே 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

11 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கை, இறுதியில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், 2020ம் ஆண்டு அக்டோபரில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில், நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். 

அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!