அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி..? வெளியான பட்டியல்..!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2021, 11:09 AM IST
Highlights

வரும், 21ம் தேதி, டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், தொகுதி பங்கீடு குறித்து, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளனர்.
 


வரும், 21ம் தேதி, டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், தொகுதி பங்கீடு குறித்து, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளனர்.

அதனையடுத்து, ஜெயலலிதா பிறந்த நாளான 24ம் தேதி மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு முடிக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க.,வுடன் சென்னையில் நடக்கும் பேச்சில் இழுபறி நிலவுகிறது. தமிழக பா.ஜ.க., தலைவர்கள் பிடிவாதமாக இருப்பதால் டெல்லியில் தான் தீர்வு ஏற்படும் என அ.தி.மு.க., வட்டாரம் நம்புகிறது. கூட்டணியில், எந்த கட்சிக்கும், 25 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்பதில் முதல்வர் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

சிறுபான்மையினர் ஓட்டுகளும் கிடைத்தால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என நம்புகிறார். அந்த அடிப்படையில், பா.ஜ.கவுக்கு 20 சீட்டுகள், பா.ம.க.,வுக்கு - 25, தே.மு.தி.க.,வுக்கு- 10. த.மா.கா.வுக்கு, - 7, புதிய தமிழகத்திற்கு - 2 என பட்டியல் போட்டுள்ளோம். அ.தி.மு.க., 170 தொகுதிகளில் போட்டியிடும். ஆனால், 20 போதாது, நாடாளுமன்ற தொகுதிக்கு ஒன்று வீதம், 39 தொகுதிகளும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூடுதலாக ஆறு தொகுதிகள் என 45 கேட்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். இந்த 60ல் இருந்து, 45 தேர்வு செய்து கொடுங்கள் என்று பட்டியல் வேறு கொடுத்திருக்கின்றனர்’’ என, விவரித்தார் ஒரு அமைச்சர்.

'செல்வாக்குள்ள மாவட்டங்களில் மட்டும் போட்டியிடுங்கள்; தமிழகம் முழுவதும் போட்டியிட ஆசைப்படாதீர்கள்' என, அ.தி.மு.க., சொன்னதில் பா.ஜக,.வுக்கு கோபம். 'அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், தாமரை சின்னத்தை இந்த தேர்தல் வழியாக அறிமுகப்படுத்த விரும்புவதில் என்ன தவறு' என கேட்கிறது பாஜக.

அத்துடன், அதிக தொகுதிகளில் நின்றால்தான், இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறலாம். அதைவிட குறைந்த எண்ணிக்கையில் சட்டசபைக்கு செல்வது, அகில இந்திய இமேஜுக்கு உகந்ததாக இருக்காது என, கருதுகிறது. எனவேதான், 45ல் இருந்து இறங்கி வர பா.ஜ.க., மறுக்கிறது.பா.ஜ.க., பிரச்னைக்கு தீர்வு வந்த பிறகுதான், பா.ம.க., -தே.மு.தி.க., கோப்பு கையில் எடுக்கப்படும்’’என்கிறார் அந்த அதிமுக அமைச்சர்.

click me!