பட்ஜெட் எப்படி இருக்கு.. செய்தியாளர்களை கேள்வி கேட்ட ஸ்டாலின்.. மெரினாவில் உற்சாகம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 1:53 PM IST
Highlights

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வலம் வந்தும் , நினைவிடத்தில் ரோஜா இதழ்களைத் தூவியும்  மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் கே .என் .நேரு , பொன்முடி , எஸ்.ரகுபதி , சேகர்பாபு , அன்பில் மகேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் ஏ.வா வேலு உள்ளிட்டவர்களும் முதலமைச்சருடன் வருகை தந்து மரியாதை செலுத்தினர். நினைவிடத்தை வலம் வந்த முதலமைச்சர் அங்கிருந்த செய்தியாளர்களை நெருங்கி வந்து நிதிநிலை நிதி நிலை அறிக்கை எவ்வாறு இருக்கின்றது என்று ஆர்வத்துடன் கேட்டார். நன்றாக இருப்பதாக செய்தியாளர்கள் பதில் அளித்த நிலையில் புன்னகைத்தவாறு முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2021-2021 ஆம் ஆண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டமும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் பட்ஜெட் குறித்து என்ன நினைக்கிறார்கள் என அவர் கேட்டறிந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 
click me!