குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உறுதி.. மகளீர் எதிர்பார்பை உறுதிசெய்த தமிழக அரசு.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 1:33 PM IST
Highlights

தொடர்ந்து வாசித்த அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவது மிக முக்கியமான திட்டம் என்றார். ஏழை மக்களுக்கு அரசின் உதவித்தொகை செல்லும் வகையில் அவர்களுக்கு அதற்கான வரையறை வகுக்கப்பட உள்ளது என்றார். கொரோனா நிவாரணம் 4000 செல்வந்தர்கள்,பணக்கார ர்களும் பெற்றதாக புகார் எழுந்துள்ளது இதனால் ஏழைகளுக்கு அரசின் உதவு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை வழங்குவதே அரசின் நோக்கம் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு நிச்சயம் மாத ஊதியம் 1000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியில் நிதி அமைச்சர் தமிழக அரசின் 2021-2021 ஆம் ஆண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். தேர்தல் நேரத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் பட்ஜெட் அவர் வாசிக்க தொடங்கிய உடன் தமிழகத்தின் நிதி நிலைமையை சரி செய்ய குறைந்தது 2 லிருந்து 3 ஆண்டுகள் எடுக்கும் என்றும், தற்போது வெளியிடப்படும் இந்த பட்ஜெட் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினார். மேலும் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்என்றார்.  

தொடர்ந்து வாசித்த அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவது மிக முக்கியமான திட்டம் என்றார். ஏழை மக்களுக்கு அரசின் உதவித்தொகை செல்லும் வகையில் அவர்களுக்கு அதற்கான வரையறை வகுக்கப்பட உள்ளது என்றார். கொரோனா நிவாரணம் 4000 செல்வந்தர்கள்,பணக்கார ர்களும் பெற்றதாக புகார் எழுந்துள்ளது இதனால் ஏழைகளுக்கு அரசின் உதவு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல், குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது தவறான புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.  பொதுவாக இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை அரசின் நோக்கம். ஏழை மக்களுக்கு உதவித்தொகை உரிமை செல்வதை உறுதி செய்ய அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது,  தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். என்றார்.

click me!