திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள்... இப்போ இல்ல.. அப்புறம் எப்போ..? தெளிவுபடுத்திய பழனிவேல் தியாகராஜன்..!

By Thiraviaraj RMFirst Published Aug 13, 2021, 1:08 PM IST
Highlights

திமுக தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, படிப்படியாக அனைத்தும் நிறைவேற்றப்படும். 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கு

திமுக தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, படிப்படியாக அனைத்தும் நிறைவேற்றப்படும். 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருந்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

பட்ஜெட்டில் உள்ள அவரது அறிக்கைப்படி, ‘’குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கவே; இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.


 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க ஆணை தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையைக் குறைப்பதால் ரூ. 1,160 கோடி  இழப்பு ஏற்படும். தமிழ்நாடு அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கையால் மீண்டும் தமிழ்நாட்டில் ₹100க்கு கீழ் இரட்டை இலக்கத்தில் வருகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என அவர் தெரிவித்தார். 

click me!