இந்த தேர்தலிலாவது கட்சியை காப்பாத்துங்க.. தொண்டர்களிடம் கதறிய விஜயகாந்த்.. குழப்பம் வேண்டாம் என அட்வைஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 12:49 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால் சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழகத் தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கழகத் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அக்கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:  நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும், அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்கவேண்டும், மேலும் எந்த குழப்பத்திற்கும் இடமளிக்கக்கூடாது, வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முக்கியமான தேர்தலாக அமையும், உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்விதக் குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால் சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழகத் தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதிமுக கூட்டணியில் போதிய அங்கீகாரம் கிடைக்காததால், தேமுதிக தலைமை அதிர்ச்சியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல்  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கைகோர்க்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், விஜயகாந்த் கட்சி தொண்டர்களை ஆயத்தமாக இருக்கும்படி அறிவுருத்தியிருப்பதுமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 
 

click me!