குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Aug 13, 2021, 1:32 PM IST
Highlights

உரிமை தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட உள்ளது.  எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்காக, குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால்தான் உரிமை தொகை உதவி கிடைக்கும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பல குடும்ப அட்டைகளில், பெண் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்ப தலைவராக பெயர் மாற்றப்பட்டு வருகிறது.

இந்த உரிமை தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட உள்ளது.  எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவல் தவறானது. எனவே, உரிமைத் தொகை பெற தவறான நினைத்து குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை. 

தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

click me!