4 தொகுதிகளில் பாஜக ஜெயித்தது எப்படி... திடுக் தகவலை வெளியிட்ட திருமாவளவன்..!

Published : May 06, 2021, 06:14 PM IST
4 தொகுதிகளில் பாஜக ஜெயித்தது எப்படி... திடுக் தகவலை வெளியிட்ட திருமாவளவன்..!

சுருக்கம்

தி.மு.க. கூட்டணி கட்சிக்கு தமிழகத்தில் மக்கள் பெரும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். இதன் மூலம் பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் சதிவேலை முறியடிக்கப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் பெற்றதையொட்டி கட்சியின் நிறுவனத்தலைவர் திருமாவளவனுக்கு மதுரை சர்வேயர் காலனியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய திருமாவளவன், ‘’பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழகம் மற்றும் மேற்கு வங்கம், கேரளா போன்ற பெரிய மாநிலங்களில் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு தேர்தல் மூலம் மரண அடி கொடுத்துள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சிக்கு தமிழகத்தில் மக்கள் பெரும் ஆதரவளித்து வெற்றி பெற செய்துள்ளனர். இதன் மூலம் பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் சதிவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.வின் வாக்குகளால் தவிர பா.ஜ.க.வுக்கு மக்கள் வழங்கிய வாக்குகள் அல்ல. தற்போது உள்ள சூழ் நிலையில் ஊரடங்கினால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றாலும் மக்களின் உயிரை காப்பது மிக அவசியம். இதில் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு தனியாக இதில் எந்த சாதனையும் சாதிக்க முடியாது’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!