இந்தியாவில் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படுகிறதா..? மத்திய அரசு அதிரடி விளக்கம்..!

Published : Apr 22, 2020, 02:33 PM IST
இந்தியாவில் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படுகிறதா..? மத்திய அரசு அதிரடி விளக்கம்..!

சுருக்கம்

இந்தியா முழுவதும் மே-3 ம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கில் குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன. 

இந்தியாவில் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலை  நம்ப வேண்டாம் என  மத்திய அரசு மத்திய விளக்கமளித்துள்ளது. 

 சுற்றுலாத்துறை உத்தரவின்படி, 2020-ல் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், ரிசார்ட்கள் மூடப்படுவதாக தகவல்கள் வெளியானது. 

இந்தியா முழுவதும் மே-3 ம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கில் குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நோய்த்தொற்றின் பரவலின் காரணமாக அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், ரிசார்ட்கள், உணவகங்கள் மூடப்பட இந்திய சுற்றுலாத்துறையின் பெயரில் போலியான அறிக்கை ஒன்று வைரலாகி வந்தது.

 

இந்தியச் சுற்றுலாத்துறையின் தரப்பில் இருந்து ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக எந்தவொரு உத்தரவும் வெளியாகவில்லை. கோவிட்-19 நோய்த்தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அரசின் அறிவிப்பு என பல வதந்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. இந்நிலையில் அக்., 15ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலை  நம்ப வேண்டாம் என  மத்திய அரசு மத்திய கேட்டுக்கொண்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!
அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!