கொரோனாவால் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் உயிரிழப்பு.. குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி கலங்கிய முதல்வர்..!

By vinoth kumarFirst Published Apr 22, 2020, 2:18 PM IST
Highlights

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவர் சைமனின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில்  ஆறுதல் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவர் சைமனின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில்  ஆறுதல் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பா்கள், மாநகராட்சி ஊழியா்களுடன் மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனா். 

ஆனால், அப்பகுதி பொதுமக்கள், மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்தால் அதன் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பெரும் பேராட்டத்திற்கு இடையே பொதுமக்கள் எதிர்ப்பால் மருத்துவர் சைமனின் உடல் வேலங்காடு சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த சூழலில், தனது கணவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை தங்கள் சமூகக் கல்லறையில் புதைக்க உதவும்படி முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவர் சைமனின் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.இறந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியிடம் போனில் ஆறுதல் கூறினார். மேலும் மகன், மகளின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி ஆனந்தியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

click me!