பெட் வேணுமா.? கொரோனாவுக்கு உதவி தேவையா.? இந்த எண்ணில் பேசுங்கள்... முழு விவரம் உள்ளே.

By Ezhilarasan BabuFirst Published May 15, 2021, 12:24 PM IST
Highlights

கோவிட் நோய் தொற்றுக்காக பரிந்துரைக்கப்படும் அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் உள்ளன.  ' ரெம்டெஸ்வீர்'  ஊசி மருந்து இந்திய அரசு, தரும் அளவுக்கு ஏற்ப கோவிட் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, தனிநபருக்கு அளிக்கப்படுகிறது


.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போதைய மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் இருப்பு நிலவரம் மற்றும் தொலைபேசி வாயிலாக மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது, தடுப்பூசி பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கான தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்காக கோவிட் கட்டளை மையத்தை உருவாக்கியுள்ள அரசு,  கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்டுப் பெற 104 என்ற எண்ணையும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கொரோனா பாதித்த நோயாளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் இன்றியமையாததாக மாறியுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் போன்ற உயிர்காக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் கொத்துக் கொத்தாக நோய் தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள் தேடி அலையும் நிலைக்கு நோயாளிகள், மற்றும் அவர்களது உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு கோவிட் கட்டளை மையம். அதாவது தற்போதைய மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் இருப்பு நிலவரம் மற்றும் வீட்டில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாகவே மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது மற்றும் தடுப்பூசி பற்றிய விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கான வழிகாட்டிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக 104 என்ற என்னையும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

படுக்கை நிலவரம் பற்றி அறிய: 

தற்போதைய மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் இருப்பு நிலவரத்தை https://tncovidbeds.tnega.org இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அல்லது 104 என்ற என்னை அழைத்து விவரம் அறியலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அப்போதைய நிலவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் விபரம் அறிந்து கொள்ள மருத்துவமனையை தொலைபேசியில் அழைக்கலாம், மருத்துவமனையின் தொலைபேசி எண் மற்றும் கூகுள் வரைபட இருப்பிட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாகவே ஒரு மருத்துவரின் ஆலோசனை உங்களுக்கு தேவைப்படுகிறதா:

https://esanjeevanipd.in என்ற இணையதளம் வாயிலாக தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம். தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவர் குழுவில் இருந்து ஒரு மருத்துவர் உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையை வழங்குவார். இந்த வசதி முற்றிலும் இலவசமாக தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாரம் முழுவதும் வழங்கப்படுகிறது.

தடுப்பூசி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள:

உங்கள் மாவட்டங்களில், பகுதிகளில் ஒரு தடுப்பூசி செலுத்தப்படும் விவரத்தினை https:// stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தில் Vaccine Center என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

கோவிட் நோய் தொற்றினால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நோயாளிகளுக்கு: 

தேவைக்கேற்ப அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.

மருந்து மாத்திரைகள் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளது: 

கோவிட் நோய் தொற்றுக்காக பரிந்துரைக்கப்படும் அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் உள்ளன.  ' ரெம்டெஸ்வீர்' ஊசி மருந்து இந்திய அரசு, தரும் அளவுக்கு ஏற்ப கோவிட் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, தனிநபருக்கு அளிக்கப்படுகிறது. 

ஆம்புலன்ஸ் தேவையா:

தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் இயங்கும் 24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணை அழைக்கவும். இவ்வாறு அந்த வழகாட்டி அமைந்துள்ளது. 
 

click me!