TN Budget 2022 : உயர்கல்வி பயில அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Mar 18, 2022, 11:25 AM IST
Highlights

அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

 தனியார் பள்ளிக்கும் பாட புத்தகம்

தமிழக சட்டபேரவையில்  நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கு நிதி  ஒதுக்கீடு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.  தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும் என்று தெரிவித்தவர்,   கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச புத்தங்கள் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என கூறினார், இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.  மேலும் தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர். எனவே வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய  புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

மகளிர் சுய உதவி குழுக்கு கடன்

சென்னை வெள்ளத்தடுப்பு  பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதியோர் ஓய்வூதியம் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என கூறினார். சுய உதவிக் குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்க 4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 64 அணைகளை புனரமைக்க ஆயிரத்து 64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். விழுப்புரம், ராமநாதபுரத்தில் 10 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை

அரசு பள்ளியில் படித்து வரும் மாணவிகள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 உதவி தொகை  வழங்கப்படும் என  அமைச்சர் அறிவித்தார். ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழா நடத்தப்படும் என்றும் இதற்காக 5.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் எனவும்  அமைச்சர் பி.டி.ஆர் பழனி வேல் ராஜன் தெரிவித்தார். மேலும் புதியதாக 18,000 வகுப்பறைகள் 1300 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என கூறினார். வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்த அமைச்சர் பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளதாக கூறினார். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். 

தமிழக பட்ஜெட் 2022-23 முழுமையான தகவல்களுக்கு : Tamilnadu Budget 2022-2023 LIVE
 

click me!