அதிமுக வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி - எடப்பாடி டீம் ஹேப்பி !

By Raghupati R  |  First Published Aug 3, 2022, 9:05 PM IST

அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இருந்து மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்தனர்.


ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.  அப்போது, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது  எனக் கூறி அவர்கள் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Tap to resize

Latest Videos

இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?

இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11-ல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால்,  பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.  இந்த விவகாரம் குறித்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் ஆஜராகி முறையீடு செய்தார். 

அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலித்து, தனி நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்றும் கூறினார். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?

click me!