கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், முதன் முறையாக இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?
இதையடுத்து, அவரது கட்சிப் பதவியை பறித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் டிஸ்மிஸ் செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், முதன் முறையாக இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக அமைச்சராக பதவியேற்றவர்களில் பாஜகவின் முன்னாள் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ முக்கியமானவர்.
மேலும் செய்திகளுக்கு..என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?
இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பாபுல் சுப்ரியோவுடன் சினேகாஷிஷ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிர்பஹா ஹன்ஸ்தா, பிப்லாப் ராய் சவுத்ரி, தஜ்முல் ஹொசைன் மற்றும் சத்யஜித் பர்மன் ஆகியோர் புதுமுக அமைச்சர்கள் ஆவார்கள்.
மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !