அடேய் அஷ்வினு.. கதை கேட்கும் போதே தூங்குவியா நீ... குப்பையில போட்டுருவோம்.. K.ராஜன் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2021, 1:03 PM IST
Highlights

அஷ்வின் என்பவன்  ஒரு குடுவை கோமாளி போல் தெரிகிறது.. கதையைக் கேட்கும்போதே தூங்கிவிட்டேன் என்று கூறுகிறார், இப்போதே இப்படி பேசுகிறார் என்றால் இந்த நபர் எப்படி வளர்வார்? இப்போதுதான் முதல் படம் நடிக்கிறார், 

எனக்கு கதை பிடிக்கலனா கேட்கும்போதே தூங்கிவிடுவேன் என தனது பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி அஸ்வின் பேசிய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தயாரிப்பாளர் கே. ராஜன் அஸ்வினை மிக கடுமையாக எச்சரித்துள்ளார். ஆணவப் பேச்சால் சினிமாவில் அறிந்தவர்கள் ஏராளம், ஒரு படம் கூட முழுசாக நடிக்காத இந்த அஸ்வின் விஜய் ,அஜித் ரேஞ்சுக்கு பேசுவது சகிக்க முடியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இப்போதே இப்படி ஆணவத்துடன் நடந்து கொண்டால் மக்கள் இந்த நபரை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி விடுவார்கள், ஜாக்கிரதை என்றும் கே.ராஜன் எச்சரித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான குக் விதி கோமாளி என்ற  சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின் என்கின்ற அஸ்வின் குமார். இதற்கு முன்பாக சில குறும் படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் நுழைய வேண்டும்  என்ற கனவில் இருந்து வந்த அவர்  பிரபலத்திற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அதில் தனக்கு இருந்த சமையல் திறமையின் மூலமாகவும், பவ்யமான பையன் போன்ற தனது தோற்றத்தாலும் ரசிகர்கள் பலரால் விரும்பப்பட்டு வந்தார் அவர். பின்னர் ஒருசில நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்ட பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு கூடியது. இதையடுத்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வந்தார் அஸ்வின். அவர் நடித்துள்ள என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அவர் பேசிய எல்லையை மீறி பேச்சுக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஒரே நிகழ்ச்சியில் நான்கு விஜய், ஆறு ரஜினிகாந்த் போல அவர் சுய பெருமை  பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரின் பேச்சு அவரின் வாழ்வில் இவ்வளவு பெரிய எதிர்மறை ஏற்படுத்துமா என்று அவரே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு அவரை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு படம் கூட முழுசா நடிக்காத அஸ்வினுக்கு இப்போதே இந்த அளவிற்கு ஆணவமா என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். மேடையில் அவர் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள ஒருவரை போல காட்டிக் கொண்டதுடன், தான் மிகவும் அழகானவன் என்றும் அதற்காக எனது பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என அவர் பேசிய பேச்சை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும், எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் அதுபோல 40 கதைகள் கேட்டு எல்லாவற்றிலும் நான் தூங்கிவிட்டேன். நான் அழகா இருக்கேன் என்று நினைத்தால் என் பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள். நல்ல நடிகன் என்று நினைத்தால் எனக்கு நன்றி சொல்லுங்கள். நான் அழகாக இருக்க வேண்டும் என்று மட்டும் நான் நினைக்கவில்லை, நன்றாக நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த இயக்குனர் கதையில் மட்டும் நான் தூங்கவில்லை, ஏற்கனவே இவர் கூறிய ஒரு கதையில் நான் நடிக்க முடியாது என மறுத்து விட்டேன். இப்போது இந்த கதையை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர் பேசினார்.

அவரின் இந்த பில்டப் பேச்சு அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் வெறுப்படைய வைத்துள்ளது. இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை அதற்குள்ளே இவ்வளவு தலைக்கனமா என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். தலைக்கனம் என்பது அவரின் இயல்பான குணம் போல என்று அஸ்வினை பலரும் வறுத்தெடுத்து  வருகின்றனர். இந்நிலையில் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அஸ்வினின் பேச்சைக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ராஜன், அஷ்வினின் இந்த பேச்சு மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:- 

அஷ்வின் என்பவன்  ஒரு குடுவை கோமாளி போல் தெரிகிறது.. கதையைக் கேட்கும்போதே தூங்கிவிட்டேன் என்று கூறுகிறார், இப்போதே இப்படி பேசுகிறார் என்றால் இந்த நபர் எப்படி வளர்வார்? இப்போதுதான் முதல் படம் நடிக்கிறார், அதற்குள்ளாக இந்த பேச்சு பேசுகிறார். இந்த இஷ்வின் இன்னொரு படம் நடிக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்,  ரைட்டர் என்றால் அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? அஷ்வின் நீ முதல் படத்திலேயே  இயக்குனர்களை இப்படி கேவலப்படுத்தி இருக்கிறாய் என்றால் எல்லா இயக்குனர்களையும் கேவலப்படுத்தியதற்கு சமம். நீ அஸ்வினாக இரு இல்ல துஷ்வினாக இரு.. எவராக வேண்டுமானாலும் இரு. இப்போது இதே தலைகனத்தோடு இருந்தால் எதிர்காலத்தில் என்ன மாதிரியாக நடந்து கொள்வாய் என்று மக்களுக்கு புரிந்து விட்டது. இயக்குனர் என்பவர்கள் அறிவுக் களஞ்சியங்கள் அவர்களை வைத்துதான் நீங்கள் நடிக்கிறீர்கள், வாழ்கிறீர்கள். எவ்வளவு பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் கதை கிடைக்காமல் தோல்வி அடைகிறார்கள். நீ என்ன அவ்வளவு பெரிய ஹீரோவா.? விஜய் அஜித் போன்றவர்களே வார்த்தைகளை நிதானமாக கையாள்கிறார்கள்.

கதை சரியாக அமையாததால் அவர்களுடைய படமே தோல்வி அடைகிறது. இந்த இயக்குனர்கள் உனக்கு  கதை சொன்னார்களா? இல்லை உனக்கு தாலாட்டு பாடினார்களா. இப்பொழுதே இப்படி பேசுகிறாய் என்றால் நீ ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் இந்த சினிமா உலகத்தை எந்த அளவிற்கு நீ வேதனைப்படுவாய் என்று எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!